Khalil Gibran
கலீல் கிப்ரனுடைய குட்டிக் கதைகள் மிக அழகானவை, ஆழமானவை. அரைப் பக்கம், ஒரு பக்கம், மிஞ்சிப்போனால் ஒன்றரைப் பக்க அளவுமட்டும் கொண்ட தக்கனூண்டு கதைகள் இவை, ஆங்கிலத்தில் ’Fables’ என்று குறிப்பிடப்படும் வகையிலான சின்னச் சின்னக் குறுங்கதைகள், ஒவ்வொன்றையும் அரை அல்லது முக்கால் நிமிடத்தில் படித்துமுடித்துவிடலாம், ஆனால் இந்தக் கதைகளும் அவை சொல்லும் ஆழமான கருத்துகளும் அத்தனை எளிதில் மனத்திலிருந்து இறங்கிவிடாமல் ஒட்டிக்கொள்ளும். ஒருவிதத்தில் இவற்றைப் பெரியவர்களுக்குமான நீதிக் கதைகள் என்றுகூடச் சொல்லலாம்.இந்தப் புத்தகத்தில் எந்தவொரு பக்கத்தையும் திறந்து படியுங்கள், இக்கதைகள் உங்களுக்குள் கிளறிவிடும் சிந்தனைகளை மகிழ்ந்து அனுபவியுங்கள்!