K. Subramania Pillai
அறிவுச்சுடர்’ என்னும் மகுடம் புனைந்து வெளி வரும் இந்நூல் வரிசை அறிவும் அனுபவமும் வாய்ந்த நல்லறிஞரால் எழுதப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளைக்கொண்டு திகழ்வதாகும். மலர் தொறுஞ் சார்ந்து துளித்துளியாகத் தேனைச் சேகரித்துப் பிறர்க்குதவும் பெற்றிவாய்ந்த தேனீக்களைப் போலப் பன்னூற் பயிற்சியாலும் வாழ்க்கை அனுபவத்தாலும் அரிதின் முயன்று சேகரித்த அருங்கருத்துகளை அனைவருங் கற்றுப் பயனெய்துமாறு அறிஞர்கள் எழுதி உதவும் நூல்களை வெளியிடக் கருதியுள்ள எமக்குத் தமிழன்பர் காட்டும் ஆதரவே எம்மை இத்துறையில் தொடர்ந்து முயல ஊக்கு தற்கு உறுதுணையாம். ஆதலின், அன்பர் பலரும் இவ்வரிசையில் வெளி வரும் நூல்களை வாங்கிப் படித்து எம்மை ஊக்கியருள வேண்டுகின்றோம்.